01 December 2022

 • மேலகரம் பள்ளியில் இலவச சைக்கிள்கள்

  Posted by dinakaran on 01 October 2022

  தென்காசி, அக். 1:  தென்காசியை அடுத்த மேலகரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா நடந்தது. பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டியன் தலைமை வகித்தார். திமுக பேரூர் செயலாளர் சுடலை, பேரூராட்சி துணை தலைவர் ஜீவானந்தம், கவுன்சிலர்கள் பூமா, மகேஸ்வரன், சிங்கத்துரை முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியை கவிதா வரவேற்றார். உடற்கல்வி ஆசிரியர் துரை தொகுத்து வழங்கினார். விழாவில் பழனி நாடார் எம்எல்ஏ பங்கேற்று 70 மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள்களை  வழங்கி பேசினார். நிகழ்ச்சியில்  திமுக நிர்வாகிகள் பாலசுப்பிரமணியன்,  கல்யாணிசுந்தரம், நன்னை சுந்தர், பாலு, பூபதி, பகவதிராஜ், பட்டமுத்து, குருசாமி,காங். வட்டார தலைவர் பெருமாள், பேரூர் தலைவர் முருகேசன், மாநில பொதுக்குழு உறுப்பினர் மாடசாமி ஜோதிடர், நகர்மன்ற கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் பேரூர் தலைவர் முருகன், சுந்தரபாண்டியபுரம் முத்துவேல், பிரபாகரன், செண்பகம் உட்பட பலர் கலந்து கொண்டனர். பட்டதாரி ஆசிரியர் ரெஜினா பானு நன்றி கூறினார்.

  Source Link

  Read more

 • கிராமங்களில் குடிநீர் பிரச்னை விரைவில் தீர்க்கப்படும்

  Posted by dinakaran on 01 October 2022

  ராதாபுரம், அக். 1: ராதாபுரம் யூனியனுக்குட்பட்ட கிராமங்களின் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. நெல்லை மாவட்ட பஞ். தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை வகித்தார். யூனியனுக்குட்பட்ட மாவட்ட கவுன்சிலர்கள், யூனியன் கவுன்சிலர்கள், பஞ். தலைவர்கள் கலந்து கொண்டனர். இதில் பல்வேறு திட்டங்களின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. கிராமங்களின் குடிநீர் பிரச்னை தொடர்பாக விவாதிக்கப்பட்டு அதிகாரிகளுடன் விரைவில் ஆலோசனை நடத்தப்படும். கிராமங்களில் குடிநீர் பிரச்னை தீர்க்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட சேர்மன் விஎஸ்ஆர் ஜெகதீஷ் உறுதி அளித்தார். கூட்டத்தில் மாவட்ட கவுன்சிலர் ஜான்ஸ் ரூபா, ராதாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜோசப் பெல்சி, ராதாபுரம் பஞ். கூட்டமைப்பு தலைவர் அனிதா பிரின்ஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் நடராஜன், ராஜா, ஞான சர்மிளா கெனிஸ்டன், முருகன், இசக்கி பாபு, ஆவுடை பாலன், அரிமுத்தரசு, காந்திமதி, பஞ். தலைவர்கள் சற்குணராஜ், சேகர், முருகன், பொன் மீனாட்சி அரவிந்தன், வைகுண்டம் பொன் இசக்கி, அருள், பேபி முருகன், முருகேசன், முருகன், ராதிகா சரவணக்குமார், வாழவந்த கணபதி பாலசுப்ரமணியம், சூசை ரத்தினம், மணிகண்டன், ஆனந்த், சாந்தா மகேஷ்வரன், வின்சி மணியரசு, வளர்மதி, சந்தனமாரி, சகாயராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Source Link

  Read more

 • தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் பொறுப்பேற்ற சிவபத்மநாதன் தலைவர்கள் சிலைகளுக்கு மரியாதை

  Posted by dinakaran on 01 October 2022

  தென்காசி, அக். 1: தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளராக மீண்டும் பொறுப்பேற்றுள்ள வக்கீல் சிவபத்மநாதன், நேற்று அதிகாலை சென்னையில் இருந்து தென்காசிக்கு வருகை தந்தார். அவருக்கு கட்சியினர் பட்டாசு வெடித்தும், சால்வை மற்றும் புத்தகங்கள் வழங்கியும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் குற்றாலம் அண்ணா சிலை, நன்னகரம் அம்பேத்கர் சிலை, கீழப்புலியூர் தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் ராஜா எம்எல்ஏ, ஜேசுராஜன், மாவட்ட அவைத்தலைவர் பத்மநாபன், துணை செயலாளர்கள் தமிழ்ச்செல்வன், ராஜதுரை, புனிதா, பொருளாளர் சரவணன், பொதுக்குழு உறுப்பினர்கள் அருள், ராஜேஷ்வரன், சமுத்திர பாண்டியன், கதிர்வேல் முருகன், மகேஸ்வரி, முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி, மாவட்ட பஞ். தலைவி தமிழ்ச்செல்வி, துணை தலைவர் உதய கிருஷ்ணன், உதயநிதி நற்பணி மன்ற மாவட்ட துணை செயலாளர் சிவஅருணன், நகர்மன்ற துணை தலைவர் சுப்பையா, ஷமீம் இப்ராஹிம், ஒன்றிய செயலாளர்கள் கடற்கரை, சேர்மத்துரை, அழகு சுந்தரம், சீனித்துரை, அன்பழகன், சிவனுபாண்டியன், செல்லத்துரை, மாரிவண்ணமுத்து, லாலா சங்கர பாண்டியன், ஜெயக்குமார், மகேஷ் மாயவன், ராமச்சந்திரன், வெற்றிவிஜயன், பெரியதுரை, நகர செயலாளர் பிரகாஷ், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, முத்தையா, குற்றாலம் குட்டி, ஜெகதீசன், நெல்சன், லட்சுமணன், மாரிமுத்து, பண்டாரம், அணி அமைப்பாளர்கள் பேச்சிமுத்து, வக்கீல் வேலுச்சாமி, கே.என்.எல்.சுப்பையா, சங்கரநயினார், இளைஞரணி சரவணன், ரமேஷ், ஆலடி எழில்வாணன், துணை அமைப்பாளர்கள் சாமித்துரை, மாரியப்பன், மோகன், குற்றாலம் கண்ணன், வக்கீல்கள் குமார் பாண்டியன், முருகன், கண்ணன், ஜெயக்குமார்பாண்டியன், சுரேஷ், சண்முகநாதன், ஜீவானந்தம், சம்முகுட்டி, சேகர், ரமேஷ்குமார், சூரியகலா, ரஹ்மத்துல்லாஹ், ஜாகிர் உசேன், தங்கபாண்டியன், இஞ்சி இஸ்மாயில், ராமராஜ், பாலாமணி, பரமசிவன், சூர்யா மணி என்ற ஈஸ்வரன், முன்னாள் அறங்காவலர் வீரபாண்டியன், செல்வம், சங்கரன்கோவில் நகரமன்ற தலைவர் உமா மகேஸ்வரி, யூனியன் தலைவர்கள் காவேரி சீனித்துரை,  திவ்யா மணிகண்டன், பேரூராட்சி தலைவர்கள் ராஜன், ராதா, வேணிவீரபாண்டியன், சின்னத்தாய் சண்முகநாதன், காளியம்மாள் செல்வகுமார், வேல் ஐயப்பன், முருகன், கஜேந்திரன், சாரதிமுருகன், கரிகாலன், கோமதிநாயகம், மோகன்ராஜ், ராஜேந்திரன், செண்பகம், சோமசுந்தரம், தர், கிருஷ்ணராஜா, பாலசுப்பிரமணியன், நமசிவாயம், வனராஜன், சோமசுந்தரம், வீட்டுவசதி சங்க தலைவர் சுரேஷ், மாரியப்பன்,  கருணாநிதி, வள்ளிநாயகம் இசக்கி, பால்ராஜ்,  இசக்கியம்மாள், முத்துக்குமார், பழனி ஆசிரியர், மந்திரம், கோபால்,  மிசா சண்முகம், ராஜ், பேச்சிமுத்து, மாடசாமி பாண்டியன், வனராஜ், சதீஷ், பிச்சையா, டேவிட் முருகன், தங்கராஜ், சுடர் கண்ணன், சுப்புராஜ், கனகராஜ், மாரிமுத்து, ஒன்றிய பொருளாளர் இசக்கி பாண்டியன், துணை செயலாளர் ஆனந்த், இளைஞரணி சுப்பிரமணியன்,  தகவல் தொழில்நுட்ப அணி குத்தாலிங்கம், மேலகரம் மாவட்ட பிரதிநிதி சுந்தரம், நாராயணன், கொக்கிகுமார், கனிராஜ், குத்தாலிங்கம், கார்த்திகேயன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தென்காசி காசி விஸ்வநாதர் கோயில் முன்பு சிவபத்மநாதனுக்கு மாவட்ட கூட்டுறவு பண்டகசாலை தலைவர்  ஷமீம் இப்ராகிம், நகர்மன்ற துணை தலைவர் சுப்பையா ஆகியோர் தலைமையில்  உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. வேம்படி பள்ளிவாசல் முன்பு இஞ்சி  இஸ்மாயில் தலைமையில் வரவேற்பு அளித்தனர். வாய்க்கால் பாலத்தில் ராஜேந்திரன்  தலைமையில் வரவேற்பு அளித்தனர். நிகழ்ச்சிகளில் நிர்வாகிகள் பாலாமணி,  நகர்மன்ற முன்னாள் தலைவர் கோமதிநாயகம், வெல்டிங் மாரியப்பன், ஐயப்பன்,  ரஹ்மத்துல்லா, செண்பகம், சீனிவாசன், முருகன், ராஜா, காசிம், மாடசாமி,  அருணாசலம், ஜாகிர் உசேன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.மேலகரத்தில் சிவபத்மநாதனுக்கு பேரூர் செயலாளர் சுடலை தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், பேரூராட்சி தலைவர் வேணி வீரபாண்டியன், துணை தலைவர் ஜீவானந்தம், துணை செயலாளர் கந்தசாமி, அவைத்தலைவர் சலீம், துணை செயலாளர் குட்டிபாப்பா, பொருளாளர் ரமேஷ் குமார், மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் வேலுச்சாமி, மாவட்ட பிரதிநிதிகள் சண்முகம் என்ற சம்முக்குட்டி, சுந்தரம் என்ற சேகர், ஒன்றிய பிரதிநிதிகள் ஈனமுத்து, பாலசுப்பிரமணியன், கபிலன். கவுன்சிலர்கள் பூமா, சிங்கத்துரை, விவசாய அணி பாலசுப்பிரமணியன், வார்டு செயலாளர்கள் செல்வராஜ், சுப்பிரமணியன், காசி விஸ்வநாதன், கணேசன், திருமலை நாதன், ஆறுமுகம், வீரபாண்டி, முத்துலிங்கம், குருசாமி, ஈஸ்வரன் உட்பட பலர் பங்கேற்றனர்.

  Source Link

  Read more

 • விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிசான சாகுபடிக்கு அடவிநயினார் அணையில் தண்ணீர் திறப்பு

  Posted by dinakaran on 01 October 2022

  செங்கோட்டை, அக். 1: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று பிசான சாகுபடிக்காக அடவிநயினார் அணையில் இருந்து பாசனத்துக்காக நேற்று முதல் விநாடிக்கு 100 கன அடி தண்ணீரை கலெக்டர் ஆகாஷ் திறந்து வைத்தார். இதன் மூலம் 7643 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுமென நீர்வளத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார். நீர்வளத்துறை கட்டுபாட்டில் தென்காசி மாவட்டம் மேக்கரை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 132.2 அடி கொள்ளளவு கொண்ட அடவிநயினார் அணை உள்ளது. இந்த அணை மூலம் 10 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில் தென்மேற்கு பருவமழை கொட்டித் தீர்த்ததால் அடவிநயினார் அணை நிரம்பியது. எனவே, பிசான சாகுபடிக்கு அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்ைக விடுத்தனர். இதையேற்று பிசான சாகுபடிக்காக அடவிநயினார் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்று நீர்வளத்துறை கூடுதல் தலைமை செயலாளர் சந்தீப் சக்சேனா அறிவித்தார்.இதன்படி நேற்று முதல் அடவிநயினார் அணையில் இருந்து கலெக்டர் ஆகாஷ் தண்ணீர் திறந்து வைத்தார். விநாடிக்கு 100 கனஅடி வீதம் 955.39 மில்லியன் கன அடி வரை பிப்.26ம் தேதி வரை 150 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. இதன் மூலம் மேட்டுக்கால், கரிசல்கால், பண்பொழிகால், வல்லாக்குளம்கால், இலத்தூர்கால், நயினாரகரம்கால், கிளங்காடுகால், கம்பளிக்கால், புங்கன்கால், சாம்பவர் வடகரைகால் மற்றும் இரட்டைக்குளம் கால்வாய் ஆகியவற்றின் நேரடி மற்றும் மறைமுகப் பாசனம் மூலம் மொத்தம் 7,643.15 ஏக்கர் பாசன வசதி பெறுகிறது. நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து குழு தலைவி தமிழ்ச்செல்வி, வடகரை பேரூராட்சி தலைவர் ஷேக் தாவூது, செயற்பொறியாளர் சிவகுமார், உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், உதவி பொறியாளர்  பாலசுப்பிரமணியன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநில துணை தலைவர் ஜாஹிர் உசேன், திமுக வடகரை செயலாளர் தங்கப்பா, விவசாய சங்க நிர்வாகிகள் முகமது இஸ்மாயில், மன்சூர், தங்கம், வடகரை அச்சன்புதூர் இலத்தூர் சுரண்டை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

  Source Link

  Read more

 • களக்காட்டில் ஜென்ட்ஸ் டெர்மினல் கடை திறப்பு விழா

  Posted by dinakaran on 30 September 2022

  நெல்லை, செப். 30:  நெல்லை அருகே களக்காட்டில் ‘ஜென்ட்ஸ் டெர்மினல்’ என்னும் புதிய ஆண்கள் ஆடையகத்தை சபாநாயகர் அப்பாவு திறந்துவைத்தார். திறப்பு விழாவில் மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ உள்ளிட்ட முக்கியப் பிரமுகர்கள் பலர் பங்கேற்றனர். நெல்லை மாவட்டம், களக்காட்டில் ‘ஜென்ட்ஸ் டெர்மினல்’ என்ற பெயரில் ஆடவருக்காக புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆடையகத்தின் திறப்பு விழா வெகு விமரிசையாக நேற்று நடந்தது. கடை உரிமையாளர் ரிஸ்வான்  வரவேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சபாநாயகர் அப்பாவு, புதிய கடையை திறந்துவைத்தார். இதில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ, முதல் விற்பனையை துவக்கிவைத்தார்.  விழாவில் மமக மாநில துணைத்தலைவர் பி‌.எஸ். ஹமீது, மாநில செயலாளர் மைதீன் சேட்கான், மனிதநேய மக்கள் கட்சியின் நெல்லை மாவட்டத் தலைவர் கே.எஸ். ரசூல் மைதீன், மாவட்டச் செயலாளர் ஜாவித், தமுமுக மாவட்டச் செயலாளர் கோல்டன் காஜா, மாவட்ட பொருளாளர் ‌தேயிலை மைதீன், களக்காடு வர்த்தக சங்கத்தலைவர் ராஜன், களக்காடு நகராட்சி தலைவர் சாந்தி சுபாஷ், காங்கிரஸ் முன்னாள் மாவட்டத் தலைவர் மோகன் குமாரராஜா உள்ளிட்டோர் வாழ்த்திப் பேசினர். இதில் அனைத்துக் கட்சிப் பிரமுகர்கள், நிர்வாகிகள், முக்கியப் பிரமுகர்கள், வர்த்தக சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் என திரளானோர் பங்கேற்றனர். களக்காடு நகர மமக தலைவர் தெளசிப் நன்றி கூறினார். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கலெக்‌ஷன்களை கொண்ட இந்த புதிய கடையின் திறப்பு விழாவை முன்னிட்டு நேற்று முதல் 3 தினங்களுக்கு வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி ரூ.5 ஆயிரத்திற்கு ஆடைகள் வாங்கினால் ரூ.4 ஆயிரமும், ரூ.2 ஆயிரத்திற்கு ஆடைகள் வாங்கினால் ரூ.1600ம், ரூ.ஆயிரத்திற்கு வாங்கினால் ரூ.800ம் செலுத்தி பொதுமக்கள் ஆடைகளை பெற்று சென்றனர்.

  Source Link

  Read more

 • கூட்டுறவு சங்கத்தில் துப்பாக்கியால் சுட்டு கொள்ளையடிக்க முயற்சி: முன்னாள் ராணுவ வீரருக்கு 7 ஆண்டு சிறை

  Posted by dinakaran on 30 September 2022

  நெல்லை, செப்.30: நெல்லை அடுத்த நாங்குநேரி அருகே தளபதிசமுத்திரம் கீழூர் தொடக்க வேளாண் கூட்டுறவு வங்கியில் கடந்த 2011ம் ஆண்டு உதவி செயலாளர் சண்முகசங்கர், எழுத்தர் ராஜா, நகை மதிப்பீட்டாளர் ஜெயபால் ஆகியோர் பணியில் இருந்தனர். அப்போது  தளபதிசமுத்திரம் சிவன்  கோவில் வடக்குத் தெருவை சேர்ந்த உலகநாதனின் மகனும் மேகாலயா மாநிலத்தில் எல்லை பாதுகாப்பு படையில் பணியாற்றிவந்தவருமான பன்னீர்செல்வம் என்பவர் நாங்குநேரி விநாயகர் சன்னதி தெருவைச் சேர்ந்த சிதம்பரத்தின் மகன் தாயப்பன் ஓட்டி வந்த காரில் அவருடன் சேர்ந்து கூட்டுறவு வங்கிக்கு வந்தார். இதில் பன்னீர்செல்வம், தான் பணியாற்றி வந்த படை பிரிவிலிருந்து தோட்டாக்களுடன் திருடிவந்த துப்பாக்கியில் சிறிது மாற்றம் செய்து, கூட்டுறவு வங்கியில் உள்ள நகை, பணத்தை கொள்ளையடிக்க கூட்டாளியுடன் சேர்ந்து திட்டமிட்டார். இதற்காக பணப்பெட்டகம் இருந்த இடத்தை காட்டுமாறு அங்கிருந்த ஊழியர்களிடம் பன்னீர் மிரட்டினார். மேலும் இதை ஏற்க மறுத்த சண்முகசங்கர், ராஜா ஆகியோர் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில் ஊழியர்கள் இருவருக்கும் படுகாயம் ஏற்பட்டது. புகாரின் பேரில் ஏர்வாடி போலீசார் பதிவுசெய்த வழக்கை விசாரித்த நாங்குநேரி கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி ராமதாஸ் நேற்று தீர்ப்பு வழங்கினார். இதில், பன்னீர்செல்வத்திற்கு  கொலை முயற்சி உள்ளிட்ட 6 பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் அடிப்படையில் தலா 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.12 ஆயிரம் அபராதம் விதித்தும் தீர்ப்பளித்தார். மேலும் 7 ஆண்டு கால தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இதில் அரசு சார்பில் கூடுதல் வக்கீல் ஜேம்ஸ்பால் ஆஜராகி வாதாடினார். இவ்வழக்கில் தொடர்புடைய தாயப்பன், ஏற்கனவே விசாரணையின் போது காலமாகிவிட்டார். தீர்ப்பை அடுத்து பன்னீர்செல்வத்தை போலீசார் கைதுசெய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர்.

  Source Link

  Read more

 • நெல்லை மாநகர திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அமர்வு கைப்பந்து போட்டி

  Posted by dinakaran on 30 September 2022

  நெல்லை, செப். 30: நெல்லையில் மாநகர திமுக  சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கல் துவங்கியது. திமுக இளைஞர் அணி மாநில செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளான ‘மனிதநேய உதயநாளை’ முன்னிட்டும், நெல்லை மத்திய மாவட்ட திமுக செயலாளர்  அப்துல் வஹாப் எம்எல்ஏ ஆலோசனையின் பேரிலும் நெல்லையில் மாநகர திமுக சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாநில அளவிலான அமர்வு கைப்பந்து போட்டி நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று துவங்கியது. இதையொட்டி  முதல் அணியாக நெல்லை மாவட்ட அணியினர் தங்களது பெயர்களை பதிவு செய்துகொண்டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி கவுன்சிலர்கள் உலகநாதன், ரவீந்தர், 39வது வார்டு செயலாளர் பாலமகேஷ், ஆல்வின் செல்லத்துரை மற்றும் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை நெல்லை மாநகர திமுக செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாடு செய்துள்ளார்.

  Source Link

  Read more

 • வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு அனைத்து பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல்

  Posted by dinakaran on 30 September 2022

  நெல்லை, செப். 30:  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கையாக நெல்லை மாவட்டத்தில் அனைத்து பள்ளி கட்டிடங்களையும் ஆய்வு செய்து அக்.3ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டுள்ளார். நெல்லை கலெக்டர் அலுவலக சிறு கூட்டரங்கில் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் கலெக்டர் விஷ்ணு தலைமையில் நடந்தது. கூட்டத்தில் கலெக்டர் விஷ்ணு பேசியதாவது: நெல்லை மாவட்டத்தைப் பொருத்தவரை மணிமுத்தாறு மற்றும் பாபநாசம் அணைகளின் நீர்வரத்து அதிகரிப்பதன் காரணமாக ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. எனவே, இந்த இரு அணைகளிலும் நீர்வரத்தை முறையாக கண்காணிக்க வேண்டும். மேற்குத் தொடர்ச்சி மலையில் பொழியும் அதிகப்படியான மழைப்பொழிவு பணகுடி பகுதியில் வௌ்ள அபாயத்தை ஏற்படுத்தும்.  நம்பியாற்றில் ஏற்படும் வௌ்ளமும் அபாயத்தை ஏற்படுத்தும் என்பதால் இவ்விரு பகுதிகளையும் கவனமுடன் கண்காணித்திட வேண்டும். நெல்லை மாநகர பகுதிகளைப் பொருத்தவரை கடந்த பருவமழை காலத்தில் வௌ்ளம் ஏற்பட்ட பகுதிகளை ஆய்வு செய்து, இந்த வருட மழைக்கு முன்னதாக கால்வாய்களில் அடைப்புகள் ஏதும் காணப்பட்டால் அவற்றை சரி செய்ய வேண்டும். அனைத்து பள்ளி கட்டிடங்களையும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி பொறியாளர்கள் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர்களுடன் ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையை வரும் அக் 3ம் தேதி (திங்கட்கிழமை)க்குள் தாக்கல் செய்ய வேண்டும். சேதமடைந்த நிலையில் மின்கம்பங்கள் ஏதும் காணப்பட்டால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு சரி செய்ய வேண்டும். சாலைகளில் உள்ள பாலங்களின் அடியில் மழைக்காலங்களில் எவ்வித தடங்கலுமின்றி மழைநீர் வடிந்து செல்லும் வண்ணம் நெடுஞ்சாலை பொறியாளர்கள் அனைத்து பாலங்களையும், உடன் ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் சீர் செய்ய வேண்டும். பருவமழை காலத்தில் வெள்ளம் அபாயம் ஏற்படும் பட்சத்தில் உடனடியாக மீட்பு பணியை மேற்கொள்வதற்கு தீயணைப்புத்துறை, காவல்துறை உள்ளிட்ட அனைத்துதுறை அலுவலர்களும் தேவையான உபகரணங்களுடன் தயார் நிலையில் இருக்க வேண்டும். இவ்வாறு கலெக்டர் பேசினார். கூட்டத்தில் நெல்லை எஸ்.பி. சரவணன், மாநகர துணை போலீஸ் கமிஷனர் சீனிவாசன், மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய செல்லையா, சேரன்மகாதேவி சப் கலெக்டர்  ரிஷப், நெல்லை ஆர்டிஓ சந்திரசேகர், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கணேஷ்குமார் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

  Source Link

  Read more

 • புஷ்பலதா கல்வி குழுமம் சார்பில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு ரூ.7.65 லட்சத்தில் புதிய பூங்கா கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்தார்

  Posted by dinakaran on 29 September 2022

  நெல்லை, செப். 29: நெல்லையில் புஷ்பலதா கல்விக் குழுமம் சார்பில் ரூ.7.65 லட்சத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகள் விளையாடுவதற்காக அமைக்கப்பட்ட புதிய பூங்காவை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்து பார்வையிட்டார்.நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை பழைய செஞ்சிலுவை சங்க கட்டிட வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள்  நலத்துறை சார்பில், மாற்றுத்திறனாளித்  திறனுடைய  குழந்தைகள் விளையாடுவதற்காக புதிய பூங்காவை கலெக்டர் விஷ்ணு திறந்து வைத்து பார்வையிட்டார். நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு கூறியதாவது: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார்.  நெல்லை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்காக மாவட்டத்தின் நிர்வாகத்தின் மூலமாக மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதார வள மையம் பாளையங்கோட்டையில் உள்ள  பழைய செஞ்சிலுவை சங்க கட்டிடத்தில் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் மன வளர்ச்சி குன்றியோருக்கு 0-6 வயதுக்குட்பட்டோருக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையம், 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோருக்கான தொழிற்பயிற்சி மையம்,  ரெடிங்டன் பவுண்டேசன் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி வழங்குவதற்கான கணினி பயிற்சி  மற்றும் தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மாற்றுத்திறன் கொண்ட மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று வருகின்றனர். இங்கு வரும் குழந்தைகள் விளையாடவும், உடல் ரீதியான பயிற்சி பெறவும், விளையாட்டு சாதனங்களுடன் பயிற்சி அளிக்க புதிய பூங்கா  புஸ்பலதா கல்வி நிறுவனம் சார்பில் ரூ.7.65 லட்சம் மதிப்பீட்டில்  அமைக்கப்பட்டுள்ளது. இந்த விளையாட்டு பூங்காவில்  சுற்று வட்டார பகுதியில் உள்ள 5 வயது முதல் 14 வயது வரையிலான மாற்றுத்திறனுடைய  குழந்தைகள் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளருடன் வந்து விளையாடலாம். இந்த பூங்காவில் விளையாடுவதன் மூலம் மாற்றுத்திறன் குழந்தைகள் உடல் தசைகள் சிறு, சிறு செயல்பாடுகள் கொடுப்பதால் அவர்களுக்கு உற்சாகமும், உடல் ரீதியான மாற்றம் கிடைக்கிறது. இவ்வாறு கலெக்டர் விஷ்ணு தெரிவித்தார். விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், புஷ்பலதா கல்விக் குழும தாளாளர் புஷ்பலதா பூரணன், ரெடிங்டன் பவுண்டேசன், புனித அன்னாள் மனவளர்ச்சி குன்றியோர் சிறப்பு பள்ளி தலைமையாசிரியர், அன்னை ஜோதி சேவா டிரஸ்ட் செயலர் செல்வகுமார், நாங்குநேரி செஞ்சிலுவை சங்க தலைவர் சபேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

  Source Link

  Read more

 • வள்ளியூரில் கோலாகல திறப்பு விழா மரியா மகளிர் கல்லூரி பல்கலைக்கழகமாக வளரவேண்டும் சபாநாயகர் அப்பாவு பேச்சு

  Posted by dinakaran on 29 September 2022

  வள்ளியூர், செப்.29: வள்ளியூரில் புதிதாக துவங்கியுள்ள மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மிகப்பெரிய பல்கலைக்கழகமாக வளரவேண்டும் என சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு வாழ்த்திப் பேசினார். வள்ளியூர் அருகே திருச்செந்தூர் சாலையில் டி.டி.என். குழுமம் சார்பில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மரியா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திறப்பு விழா கோலாகலமாக நேற்று நடந்தது. கல்லூரி வளாகத்தில் நடந்த இவ்விழாவுக்கு தலைமை வகித்த  கல்லூரித் தாளாளரும்,  செயலாளருமான ஹெலன் லாரன்ஸ் வரவேற்றுப் பேசினார். வள்ளியூர் பாத்திமா திருத்தலத் தந்தை ஜான்சன் ஆசியுரை வழங்கினார்.  இதில் முதன்மை விருந்தினராகப் பங்கேற்ற தமிழக சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு புதிய கல்லூரி கட்டிடத்தை திறந்துவைத்துப் பேசுகையில் ‘‘பெண்கள் கல்வி கற்கும் நிலையை உருவாக்கி தந்தவர் தந்தை பெரியார். அவரது நோக்கத்தை பெண் கல்வியை நீதிக்கட்சி ஆட்சி வழியில் திராவிட மாடல் அரசு போற்றி பாதுகாத்து வருகிறது. புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வரும் நமது முதல்வர் மு.க.் ஸ்டாலின்,  படிக்கும் மகளிருக்கு மாதம் ரூ. ஆயிரம் வழங்கி வருகிறார். பச்சைத் தமிழன் என ெபரியாரால் அழைக்கப்பட்ட காமராஜர், கிராமங்கள் தோறும் பள்ளி துவங்கி பெண் குழந்தைகள் கல்வி கற்கச் செய்தவர். அவருக்கு பிறகு உயர் கல்விக்கு ரூ.ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்து உயர்கல்விக்கு புதிய கட்டிடங்களைச் கட்டச் செய்த  முதல்வர், அதற்கு காமராஜர் பெயரை வைக்க உத்தரவிட்டுள்ளார். இது என் அரசு அல்ல; எனது அரசும் அல்ல. நமது அரசு சமூகநீதிக்கான அரசு என சொல்லுவதோடு மட்டுமல்லாமல் அதைச் செயல்படுத்தி வரும் நமது முதல்வர், தகுதியான கல்லூரிகளுக்கு உடனடியாக அனுமதி அளித்து வருகிறார். தாமிரபரணி ஆற்றில் முன்னீர் பள்ளம் அருகேயிருந்து ராதாபுரம் தொகுதி முழுவதற்கும் குடிநீர் வழங்கும் திட்டத்திற்கு முதல்வர் ரூ.271 கோடியை வாரி வழங்கியுள்ளார். இத்திட்டம் இன்னும் ஒன்றரை ஆண்டில் நிறைவேற்றப்படும். ரூ.3 கோடியில் விளையாட்டு ஸ்டேடியம் அமைக்கவும் ரூ.100 கோடி செலவில் சர்வதேச தரத்தில் விளையாட்டு பயிற்சி மையம் துவங்கு வதற்கான திட்டங்களையும் நமது முதல்வர் தந்துள்ளார். இக்கல்லூரி இப்பகுதியில் மிகப்பெரிய  பல்கலைக்கழகமாக வளர வேண்டும்’’ என்றார். முன்னதாக விழாவில் ஒலிவா குத்துவிளக்கேற்றினார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் சுப்பிரமணிய பிள்ளை, சென்னை டயனமிக்  இயக்குநர் வெல்லிங்டன், வள்ளியூர் யூனியன் சேர்மன் ராஜா ஞானதிரவியம், வள்ளியூர் பேரூராட்சி தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், நேரு நர்ஸிங் கல்லூரி  முதல்வர் மார்க்கரெட்  ரஞ்சிதம், சமூகரெங்கபுரம் ஹைடெக் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர்  சுரேஸ் தங்கராஜ் தாம்சன், மரியா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் சி.ஆர்.கிளாடிஸ் லீமா ரோஸ், வார்டு உறுப்பினர் உஷா வாழ்த்திப் பேசினர். விழாவில் திமுக ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலாளர் ஜோசப் பெல்சி, திமுக பிரதிநிதி நம்பி,  வணிகர் சங்கத்தலைவர் எட்வின் ஜோஸ், வள்ளியூர் வியாபாரிகள் சங்கத்தலைவர் முருகன், செயலாளர் ராஜ்குமார், வள்ளியூர் வார்டு கவுன்சிலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.இயற்கை எழிலுடன் கல்வி திறப்பு விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற நெல்லை மனோன்மணியம் சுந்தரனார்  பல்கலைக்கழக துணைவேந்தர் சந்திரசேகர் நூலக கட்டிடத்தைத் திறந்து வைத்துப் பேசுகையில் ‘‘இயற்கை எழிலுடன் கல்வி கற்பிக்கும் வகையில் அமைந்துள்ள இக்கல்லூரி மாணவர்களுக்கு கற்கவேண்டும் என்ற எண்ணத்தை மேலும் மேலும் தூண்டும். வள்ளியூரிலும் டிடிஎன் ஸ்கூல் ஆப்  காமர்ஸ் ஆக  உருவாக வாய்ப்பு உள்ளது. இன்றைக்கு அதிக அளவில் தேவையாக உள்ள வணிகவியல், வணிக மேலாண்மை ஆகிய இரு படிப்புகளும் இங்கு அமைந்துள்ளது சிறப்புக்குரியது. இந்த கல்லூரி உயர் ஆராய்ச்சிகளையும் உருவாக்கும்  கல்லூரியாக மாறவேண்டும்’’ என்றார்.

  Source Link

  Read more

 • நெல்லை அருகே பெட்ரோல் குண்டு தயாரித்து வீசி இணையத்தில் பரப்பியவர் கைது

  Posted by dinakaran on 29 September 2022

  நெல்லை, செப்.29: சங்கரன்கோவில் அருகே பெட்ரோல் குண்டு தயாரித்து வீசி, சமூக வலைதளங்களில் வீடியோவை பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மற்றொருவரை போலீசார் தேடி வருகின்றனர்.சங்கரன்கோவில் அருகேயுள்ள ராமநாதபுரம் கிராமத்தைச் சேர்ந்த வைரமுத்து மகன் கார்த்திக். அதே பகுதியைச் சேர்ந்த ரவி மகன் அஜித்குமார்(23), பால் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் ஓர் ஆண்டுக்கு முன்பு இவர்கள் ராமநாதபுரத்தில் உள்ள குளத்தின் கரையில் வைத்து பெட்ரோல் குண்டு தயாரித்துள்ளனர். பெட்ரோல் குண்டை அஜித்குமார் பற்ற வைக்க, அதை கார்த்திக் வீசி எறிந்ததை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பரப்பி உள்ளனர். ஒரு வருடம் கழித்து தற்போது இந்த வீடியோ வைரலாகி வந்த நிலையில் இதுகுறித்து ராமநாதபுரம் விஏஓ மல்லிகா கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சங்கரன்கோவில் டவுன் போலீசார் அஜித்குமாரை கைது செய்தனர். தப்பி ஓடிய கார்த்திக்கை தேடி வருகின்றனர்.

  Source Link

  Read more

 • மாவட்டங்களுக்கு தவணை முறையில் அனுப்புகின்றனர் தட்டச்சு தேர்வு முடிவுகள் வெளியாகியும் சான்றிதழ் தாமதம்

  Posted by dinakaran on 29 September 2022

  நெல்லை, செப்.29:  தமிழகத்தில் தொழில்நுட்பத்துறை சார்பில் தட்டச்சு, சுருக்கெழுத்து உள்ளிட்ட தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இத்தேர்வு எழுத மாணவர்கள் தனியாக தட்டச்சு கல்வி நிலையங்களில் பயிற்சி பெறுகின்றனர். தமிழ், ஆங்கிலம் மொழிகளில் இளநிலை, முதுநிலை தேர்வுகள் நடத்தப்படுகின்றன. கொரோனா பரவல் காலத்தில் இத்தேர்வு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்ததால் கடந்த மார்ச் மாதம் தட்டச்சு தேர்வுகள் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. இதை பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானதை தொடர்ந்து மாணவர்கள் அடுத்த கட்ட தேர்வுக்கான பயிற்சி பெற்று வருகின்றனர். அடுத்த கட்ட தேர்வு கடந்த சனிக்கிழமை முதல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் நீதிமன்ற வழக்கு காரணமாக இத்தேர்வு தற்காலிகமாக தேர்வு தேதி குறிப்பிடப்படாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதனால் தேர்வுக்கு பயிற்சி பெற்ற மாணவர்கள் எப்போது தேர்வு நடைபெறும் என தெரியாமல் தவிக்கின்றனர்.இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் நடந்த தேர்வு முடிவுகள் வெளியான பின்னரும், இதுவரை அதற்கான சான்றிதழ்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் முழுமையாக கிடைக்கவில்ைல. தற்போது சில மாவட்டங்களுக்கு மட்டும் அனுப்பி வைக்கப்படுவதாக கூறப்படுகிறது. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்ட மாணவர்களுக்கு தேர்ச்சி சான்றிதழ் இன்னும் வந்து சேரவில்லை. சான்றிதழ் வந்த பின்னர்தான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும். சான்றிதழ் வருவதில் தாமதம் ஏற்படுவதால் பிற மாவட்டத்தினருக்கு கிடைக்கும் பதிவு மூப்பு தங்களுக்கு பாதிக்கப்படுமோ என தேர்ச்சி பெற்றவர்கள் கவலைப்படுகின்றனர். எனவே தட்டச்சு தேர்வுக்கான சான்றிதழ்களை உடனே சம்பந்தப்பட்ட மாணவர்களுக்கு வழங்க வேண்டும் எனவும், தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் தேர்வு முடிவுகள் வெளியான நாளையே பதிவு மூப்பு நாளாக வேலைவாய்ப்பகளங்களில் பதிவு செய்ய வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர்.

  Source Link

  Read more

 • நெல்லை அருகே பள்ளத்தில் கார் கவிழ்ந்து டிரைவர் பரிதாப பலி

  Posted by dinakaran on 29 September 2022

  நெல்லை, செப். 29: நெல்லை அருகே அதிவேகமாக சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்ததில் டிரைவர் பரிதாபமாக இறந்தார். நெல்லை அடுத்த தேவர்குளம் அருகே வன்னிக்கோனேந்தல் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பரமசிவன் மகன் கனகராஜ் (28). கார் டிரைவரான இவர், நேற்று முன்தினம் இரவு கழுகுமலைக்கு சவாரி சென்றுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்தார். தேவர்குளம் அடுத்த கூவாச்சிபட்டி அருகே வந்தபோது இவரது கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடிய சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த கனகராஜை, தகவலின் பேரில் விரைந்து சென்ற தேவர்குளம் போலீசார் மீட்டு நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். ஆனால், அங்கு அவர் சிறிது நேரத்தில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் தேவர்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

  Source Link

  Read more

 • நெல்லையப்பர் கோயிலில் நவராத்திரி திருவிழா துவக்கம்

  Posted by dinakaran on 29 September 2022

  நெல்லை, செப்.29: நெல்லையப்பர் கோயிலில் சோமவார மண்டபத்தில் நவராத்திரி திருவிழா துவங்கி நடந்து வருகிறது. இதில் திரளான பக்தர்கள் தினமும் பங்கேற்று வருகின்றனர். நெல்லையப்பர் கோயிலில் கடந்த 26ம் தேதி சோமவார மண்டபத்தில் நவராத்திரி விழா துவங்கியது. விழா வரும் 4ம்தேதி வரை நடக்கிறது. விழாவையொட்டி தினமும் காலையில் சுவாமி, அம்பாள், விநாயகர், சுப்பிரமணியர், வள்ளி, தெய்வானை ஆகிய உற்சவர்களுக்கு கும்பம் வைத்து ஹோமம், சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடக்கிறது. பல்வேறு சுவாமி சிலைகள் வைக்கப்பட்டு, மின் அலங்காரம் செய்யப்பட்டு கொலு வைக்கப்பட்டுள்ளது. விழா நாட்களில் கோயிலில் உள்ள நின்றசீர் நெடுமாறன் கலையரங்கத்தில் மாலை 6 மணி முதல் இரவு 7 மணிவரை பக்தி இன்னிசை நிகழ்ச்சி, பட்டிமன்றம், நெல்லை பாலகுரு பாகவதர் நாமசங்கீர்த்தனம், நாட்டியபள்ளி மாணவிகளின் பரதநாட்டியம், பக்தி சொற்பொழிவு உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது. நவராத்திரி விழாவின் நிறைவு நாளான 5ம் தேதி விஜயதசமியன்று சுவாமி சந்திரசேகரர், வெள்ளி குதிரை வாகனத்தில் எழுந்தருளி மாலை 4 மணிக்கு வன்னி மரத்தில் அம்பு விடும் காட்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை உதவி ஆணையர் கவிதா, செயல் அலுவலர் அய்யர் சிவமணி ஆகியோர் செய்துள்ளனர்.

  Source Link

  Read more

 • நெல்லை கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் உள்ள அலுவலகம் இடமாற்றம்

  Posted by dinakaran on 28 September 2022

  நெல்லை, செப்.28: நெல்லை கலெக்டர் ஆபீஸ் வளாகத்தில் நூற்றாண்டு பழமையான கட்டிடம் மேற்கூரை இடிந்து விழுந்ததை தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்ட மகளிர் திட்ட அலுவலக பொருட்களை ஊழியர்கள் மாற்று இடத்துக்கு எடுத்து சென்றனர். நெல்லை கலெக்டர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள நூற்றாண்டு பழமையான கட்டிடத்தில் நீதிமன்றம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் முதலியன செயல்பட்டு வந்தன. இதைதொடர்ந்து புதிய கட்டிடங்கள் கட்டப்பட்ட பின் நீதிமன்றம், மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் இடமாற்றம் செய்யப்பட்டது. பழமையான கட்டிடத்தில் கனிம வளத்துறை, ரயில்வேக்கு நிலம் கையப்படுத்தும் அலுவலகமும் அதன்மாடியில் மகளிர் திட்ட அலுவலகமும், இ-சேவை மையம், மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகம் ஆகியன செயல்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது பழமையான கட்டிடத்தில் மகளிர் திட்ட அலுவலகத்தின் மேற்கூறை திடீரென இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக கட்டிடத்தில் பணியாளர்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. கட்டிடம் திடீரென இடிந்து விழுந்ததால் ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து மகளிர் திட்ட அலுவலகம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள பூமாலை வணிகவளாகத்துக்கு மாற்றம் செய்யப்பட்டது. இதைதொடர்ந்து மகளிர் திட்ட பணியாளர்கள் அலுவலக தளவாட பொருட்களான மேஜை, பீரோ, சேர்கள் உள்ளிட்ட பொருட்களை லாரிகளில் எடுத்து சென்றனர்.

  Source Link

  Read more

 • வரத்து குறைவால் விலையேற்றம் கேரட் விலை ரூ.100ஐ தாண்டியது

  Posted by dinakaran on 28 September 2022

  நெல்லை, செப். 28: தென் மாவட்டங்களுக்கு வரத்து குறைவால் மலைக்காய்கறிகளின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நெல்லையில் கேரட் விலை ரூ.100ஐ தாண்டி காணப்படுகிறது. பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசி மாதத்தில் அசைவம் சாப்பிடுவதை பலர் தவிர்ப்பது வழக்கம். இதையடுத்து புரட்டாசி மாதத்தில் பெரும்பாலும் காய்கறி கள் விலை உயர்வது வழக்கம். அதிலும் இவ்வாண்டு மலைக்காய்கறிகளின் விலை புரட்டாசி மாதத்தில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் இருந்து கேரட், பீன்ஸ், பீட்ரூட் உள்ளிட்ட காய்கறிகளை வரவழைத்து விற்பனை செய்வது வழக்கம். இவ்வாண்டு வரத்து குறைவால் மலைக் காய்கறி களின் விலை அதிகரித்து வருகிறது.நேற்றைய நிலவரப்படி கேரட் விலை ஒரு கிலோ ரூ.106ஆக உள்ளது. பீட்ரூட் விலை ரூ.46 முதல் 50 ஆகவும், ரிங் பீன்ஸ் ரூ.75 ஆகவும் காணப்படுகிறது. காலிபிளவர் விலை ரூ.70 ஆக உள்ளது. புரட்டாசி மாதத்தில் ஏற்கனவே காய்கறிகளின் விலை அதிகரிக்கும் நிலையில், இவ்வாண்டு உள்ளூரில் விளையும் வெள்ளை கத்தரிக்காய், பச்சை மிளகாய் உள்ளிட்டவற்றின் விலையும் கூட ரூ.50ஐ தாண்டி காணப்படுகிறது. அவரைக்காய் ரூ.80 வரை விற்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘புரட்டாசி மாதத்தில் சைவம் விரும்பி சாப்பிடுவோரின் எண்ணிக்கை அதிகம். அதிலும் தசரா காலமாக இருப்பதாலும், சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி என பண்டிகைகள் அணிவகுக்கும் நிலையில் காய்கறிகளின் விலை இயல்பாகவே ஏறும். இப்போது மலைக் காய்கறிகள் வரத்து குறைவு காரணமாக கேரட், பீன்ஸ் விலையும் உயர்ந்து காணப்படுகிறது. ஐப்பசி மாதத்திலும் முகூர்த்த சீசன் காரணமாக காய்கறிகள் விலை குறையும் வாய்ப்பில்லை. அதேபோல் மழை அதிகம் பெய்தாலும் விலையேற்றத்தில் மாற்றம் இருக்காது’’ என்றனர்.

  Source Link

  Read more

 • பேட்டையில் சிதிலமடைந்த சாலை சீரமைப்பு பணி துவக்கம்

  Posted by dinakaran on 28 September 2022

  பேட்டை, செப்.28: நெல்லையிலிருந்து வீரவநல்லூர், பத்தமடை, பாப்பாக்குடி, முக்கூடல், சேரன்மகாதேவி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், இதேபோல் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து நெல்லைக்கு தினமும் ஏராளமானோர் கல்வி மற்றும் பிற வேலைகளுக்காக பேட்டை வழியாக 10ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்களில் சென்று வருகின்றனர். அத்தியாவசியமிக்க இந்த சாலையில் நெல்லை டவுனை அடுத்த காட்சி மண்டபம் முதல் குளத்தங்கரை பள்ளிவாசல் வரை குண்டும் குழியுமாய் உருக்குலைந்து போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. இதனால் இவ்வழியாக செல்வோர் கடும் அவதிக்குள்ளாக்கின்றனர். இருசக்கர வாகனங்களில் செல்வோர் உயிரை கையில் பிடித்தவாரே ஒருவித அச்சத்துடன் பயணிகின்றனர். சாலையை விரைந்து சீரமைத்திட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறத்தினர். இதுகுறித்த செய்தி கடந்த 25ம்தேதி தினகரனில் வெளியானது. இதையடுத்து டவுன் காட்சி மண்டபம் காமாட்சி அம்மன் கோயிலில் இருந்து பேட்டை குளத்தங்கரை பள்ளிவாசல் வரையிலான சுமார் 800 மீட்டர் சாலை  சீரமைக்கும் பணி துவங்கியது. இதில் முதல் கட்டமாக காமாட்சி அம்மன் கோயில் மண்டபம் அருகில் இருந்து சுமார் 100 மீட்டர் தூரத்திற்கு சாலையின் வலதுபுறம் வடிகால் அமைக்கப்படுகிறது. இதை தொடர்ந்து சாலையில் தண்ணீர் தேங்கும் பகுதி நிரப்பப்பட்டு புதிய சாலை அமைக்கும் பணி நடைபெறும் என்றும், கோடீஸ்வரன் நகர் அருகில் இருந்து குளத்தங்கரை பள்ளிவாசல் வரையிலான சாலை 5.5 மீட்டர் அகலத்தில் இருந்து 7 மீட்டர் அகலமாக விரிவாக்கம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. சில ஆண்டுகளாக இந்த சாலை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டாமல் இருந்த நிலையில் தினகரன் செய்தி எதிரொலியாக புதிய சாலை அமைக்கும் பணி துவங்கியுள்ளதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  Source Link

  Read more

 • நெல்லை மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோ-ஆப்டெக்ஸில் ரூ.4.30 கோடி விற்பனைக்கு இலக்கு

  Posted by dinakaran on 28 September 2022

  நெல்லை, செப்.28: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நெல்லை கோ-ஆப்டெக்ஸ் மூலம் நடப்பு ஆண்டில் ரூ.4.30 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நெல்லை சந்திப்பு காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிறுவனத்தில் தீபாவளி சிறப்பு விற்பனையை நெல்லை ஆர்.டி.ஓ. சந்திரசேகர் துவக்கி வைக்க பாளை அரசு சித்த மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் சாந்த மரியா பெற்றுக் கொண்டார். பின்னர் ஆர்டிஓ சந்திரசேகர் கூறுகையில், கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பல்வேறு ரகங்கள், பட்டுப் புடவைகள் 30 சதவீத தள்ளுபடியில் விற்பனை செய்கிறது. நெல்லை மாவட்டத்தில் நெல்லை சந்திப்பு காந்திமதி விற்பனை நிலையம், பாளை விற்பனை நிலையம், நெல்லை டவுன் கீழரதவீதி, நெல்லை டவுன் பட்டு மாளிகை ஆகிய இடங்களில் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையங்கள் அமைந்துள்ளன. நெல்லை மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2021) ரூ.2.73 கோடிக்கு ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்பட்டன. நடப்பு ஆண்டில் (2022) ரூ.4.30 கோடி விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  மேலும் வாடிக்கையாளர்கள் வசதிக்காக `கனவு நனவு திட்டம்' என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி 10 மாத தவணைகள் வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்டு 11 மற்றும் 12வது தவணை தொகையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செலுத்தும். முதிர்வு தொகை மூலம் 20 சதவீத தள்ளுபடியில் ஜவுளி ரகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. எனவே வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் மூலம் ஜவுளி ரகங்களை சிறப்பு தள்ளுபடியில் பெற்று பயனடைந்து நெசவாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு நெல்லை ஆர்டிஓ சந்திரசேகர் கூறினார். நிகழ்ச்சியில் கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளர் ராஜேஷ்குமார், மேலாளர் (ரகம் மற்றும் பகிர்மானம்) அன்பரசு, காந்திமதி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மேலாளர் ராமசுப்பிரமணியன் மற்றும் அரசு அலுவலர்கள், கோ ஆப்டெக்ஸ் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

  Source Link

  Read more

 • கங்கைகொண்டானில் மனைவியை கத்தியால் குத்திய கணவருக்கு 4 ஆண்டு சிறை

  Posted by dinakaran on 28 September 2022

  நெல்லை, செப்.28: நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் வெங்கடாசலபுரம் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பெருமாத்தாள்(40). கயத்தாரை சேர்ந்த வீரபுத்திரன் என்ற ராஜ் கூலி தொழிலாளி ஆகியோருக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. இவர்களுக்கு மகன், மகள் என இரு குழந்தைகள் உள்ளனர். ராஜ், பெருமாத்தாள் மீது சந்தேகப்பட்டு அடிக்கடி தகராறு செய்து வந்தார். இதனால் கணவன், மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு மூன்று ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். பெருமாத்தாள் பல பகுதிகளுக்கு சென்று கருப்பட்டி விற்பனை செய்து குழந்தைகளை காப்பாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 2016 மே 5ம்தேதி மாலை பெருமாத்தாள் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த ராஜ், மனைவியை கருப்பட்டி விற்க செல்லக்கூடாது எனக்கூறி தகராறு செய்தார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மனைவியை கழுத்தில் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் அளித்த புகாரின் பேரில் கங்கைகொண்டான் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வீரபுத்திரன் என்ற ராஜை கைது செய்தனர். இதுகுறித்த வழக்கு நெல்லை மகிளா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விஜயகுமார், குற்றவாளி ராஜூக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராத தொகையில் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.8 ஆயிரம் வழங்கவும் தீர்ப்பு கூறினார். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயபிரபா ஆஜரானார்.

  Source Link

  Read more

 • பாளையில் மனைவியை கத்தியால் குத்தியவர் கைது

  Posted by dinakaran on 28 September 2022

  நெல்லை, செப். 28: பாளையில் மனைவியை கத்தியால் குத்தியவர் கைது செய்யப்பட்டார். பாளை கோரிப்பள்ளம் மாத்தியூ தெருவை சேர்ந்தவர் ஐசக் சாமுவேல் (29). கட்டிட தொழிலாளியான இவர், அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததால் மனைவி சித்ராவுக்கும், அவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் சம்பவத்தன்று போதையில் வந்த ஐசக் சாமுவேல், சித்ராவிடம் தகராறு செய்து அவரை கத்தியால் குத்தினார். படுகாயம் அடைந்த சித்ராவை அங்கிருந்தவர்கள் மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து சித்ரா கொடுத்த புகாரின் பேரில், பாளை போலீசார் வழக்கு பதிவு செய்து ஐசக் சாமுவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

  Source Link

  Read more

To Top To Top